Sunday, June 16, 2024
Home » பிரதி மதுவரி ஆணையாளர் தங்கராஜா அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு

பிரதி மதுவரி ஆணையாளர் தங்கராஜா அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு

by gayan
June 8, 2024 6:30 am 0 comment

இலங்கை மது வரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளரும் (மனித வளம்) முன்னாள் கிழக்கு மாகாண மதுவரி திணைக்கள உதவி ஆணையாளருமான ரோட்டரியன் சண்முகம் தங்கராஜா தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெற்றார்.

அவருக்கு மது வரி திணைக்கள தலைமையகத்திலும் திருமலை மாகாண தலைமையகத்திலும் பிரியாவிடை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

சண்முகம் தங்கராஜா மதுவரித் திணைக்கள வரலாற்றில் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பிரதி ஆணையாளர் என்ற பெருமையைப் பெற்றவர்.

இவர் மதுவரி திணைக்கள கிழக்கு மாகாண உதவி ஆணையாளராக செயற்பட்ட அதேவேளை, முழு இலங்கைக்கான பிரதி ஆணையாளராக பதில் கடமையையும் ஆற்றியிருந்தார்.

சண்முகம் தங்கராஜா பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும், கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்டவர். ஆரம்பக் கல்வியை பெரியகல்லாற்றிலும், பின்னர் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயம் மற்றும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் இடைநிலை உயர்நிலைக் கல்வியையும் பெற்று மதுவரி திணைக்களத்தில் மதுவரி பரிசோதகராக இணைந்து கொண்டார் .

32 வருட சேவைக் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்து முதன் முதலில் மதுவரி பிரதி ஆணையாளராக நியமனம் பெற்ற ஒரே ஒருவர் தங்கராஜா ஆவார்.

சிறந்த விளையாட்டு வீரரான தங்கராஜா கல்முனை ரோட்டரி கழக (PHF) தலைவராக இருந்து, தற்போது மட்டக்களப்பு றோட்டரி கழகத்தின் நிருவாகசபை உறுப்பினராக சமூக பணியாற்றி வருகிறார்.

முன்னர், அம்பாறை மாவட்டத்தின் கலால் அத்தியட்சகராக கடமையாற்றிய சண்முகம் தங்கராஜா கிழக்கு மாகாணத்தின் புதிய உதவி ஆணையாளராக பதவி உயர்வு பெற்று 01.01.2023 அன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.

அவர் கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் உபதலைவராகவும், கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தின் பணிப்பாளர் சபை பிரதிநிதியாகவும் செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வி.ரி.சகாதேவராஜா…?

(காரைதீவு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT