Thursday, July 18, 2024
Home » 25 நாட்களில் மட்டு.மாவட்டத்தை அடைந்தது சந்நிதி கதிர்காம பாதயாத்திரை குழு

25 நாட்களில் மட்டு.மாவட்டத்தை அடைந்தது சந்நிதி கதிர்காம பாதயாத்திரை குழு

by Prashahini
June 7, 2024 9:47 am 0 comment

யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பித்து 25 நாட்களில் மட்டு.மாவட்டத்தை அடைந்தது சந்நிதி கதிர்காமம் பாதயாத்திரை குழு.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டத்தில் பாதயாத்திரையை மேற்கொண்ட குழுவினர் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.

ஜெயா வேல் சாமி தலைமையில் 88அடியார்களுடன் வருகை தரும் பாதயாத்திரை குழுவினர் நேற்று முன்தினம் (05) வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயத்தை வந்தடைந்தது.

அங்கு சிரமதானம் மேற்கொண்டனர்.

அதன்பின்னர் கதிரவெளி பனிச்சங்கேணி ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்திற்கு வருகை தந்தரமயும் குறிப்பிடத்தக்கதாகும்.

காரைதீவு குறூப் நிருபர் சகா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT