கன்னட திரையுலகின் முன்னணி நடிகையும் சமீபகாலமாக தமிழ், தெலுங்கில் கவனம் பெற்றுள்ளவருமான ராகினி திவேதி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக முருகா அசோக்குமார் நடித்துள்ளார்.
இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.காமெடி,ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படம் தமிழ்,கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி உள்ளது. அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரௌபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார்.
கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 20 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் மாதப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி,நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
கதாநாயகிக்கு திடீரென ஒரு ஈமெயில் வருகிறது. அதில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து விளையாடினால் மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக சொல்லப்பட,அந்த விளையாட்டிற்குள் இறங்கிய கதாநாயகி எதிர்பாராத விதமாக ஒரு மாஃபியா கேங்கில் சிக்கிக் கொள்கிறார். இதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை.
சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளார்கள்.
இந்த படம் குறித்தும் படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் ரிலீஸ் குறித்தும் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான எஸ்.ஆர் ராஜன் கூறும்போது,ஒரு பிசினஸ்மேனாக இருந்துகொண்டு படம் தயாரிக்கும் ஆர்வத்தில் சினிமாவிற்கு வந்தேன். ஆனால் இங்குள்ள சூழ்நிலை என்னை ஒரு இயக்குநராகவே மாற்றி விட்டது.