793
– பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதிக்கு
ஜூலை 01 ஆம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
அதற்கமைய,
- 0 – 30 அலகுகள் ரூ.8 இலிருந்து ரூ.6 (18 இலட்சம் பயன்பாட்டாளர்கள்)
- 30 – 60 அலகுகள் ரூ.20 இலிருந்து ரூ.9 (20 இலட்சத்திற்கும் அதிக பயன்பாட்டாளர்கள்)
- 60 – 90 அலகுகள் ரூ.30 இலிருந்து ரூ. 18 (15 இலட்சம் பயன்பாட்டாளர்கள்)
- 90 – 120 அலகுகள் ரூ.50 இலிருந்து ரூ. 30 (68 இலட்சம் பயன்பாட்டாளர்கள்) ஆக குறைப்பதற்கான யோசனையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இலங்கை மின்சார சபை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதே போன்று மத தலங்களுக்கான கட்டணங்களும் குறைக்கப்படுமென அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இன்றையதினம் (06) மின்சார சபை மறுசீரமைப்பு மூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.