Saturday, July 13, 2024
Home » அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

- இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்

by Rizwan Segu Mohideen
June 5, 2024 8:20 pm 0 comment

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா ஷமீர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் இன்று (05) இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தனது X கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,

“எமது சிறந்த இருதரப்பு உறவுகளை, குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பு, சுகாதாரம், கல்வி, மீன்பிடி, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு, சமூகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மேலும் வலுப்படுத்துவதில் எமது கலந்துரையாடல் அமைந்திருந்தது.”

“இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் நீண்டகால நம்பிக்கை மற்றும் நட்பின் மீது கட்டமைக்கப்பட்ட வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளதோடு, மேலும் இந்த உறவு வலுவடையும் என நான் நம்புகிறேன்.”

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT