Sunday, June 16, 2024
Home » சிறுமி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது

சிறுமி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது

- குறித்த சிறுமி தற்போது பொலிஸாரின் பொறுப்பில்

by Prashahini
June 5, 2024 9:38 am 0 comment

சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்த, சிறுமி ஒருவர் தாக்கப்படும் வீடியோவுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்படுள்ளனர்.

வெலிஓயா பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் வெலிஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், சந்தேகநபர் குறித்த சிறுமியுடன் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து

வெலிஓயா பொலிஸார், முல்லைத்தீவுப் பிரிவு குற்றப் விசாரணைப் பிரிவினர், புல்மோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரின் உதவியுடன் 45 வயதான குறித்த சந்தேகநபர் இன்று (05) அதிகாலை புல்மோட்டை – அரிசிமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சந்தேகநபருக்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் 37 மற்றும் 46 வயதுடைய வெலிஓய, கல்யாணபுர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரை வெலிஓய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான 4 1/2வயதான குறித்த சிறுமியை, பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிஓய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT