Sunday, June 16, 2024
Home » பிரமாண்டமாக இடம்பெற்ற ஶ்ரீயானி ட்ரெஸ் பொயின்ட் வர்ண இரவு

பிரமாண்டமாக இடம்பெற்ற ஶ்ரீயானி ட்ரெஸ் பொயின்ட் வர்ண இரவு

- ஶ்ரீயானி ட்ரஸ் பொயின்ட் வர்ண இரவில் ஊழியர்களுக்கு பாராட்டு

by Rizwan Segu Mohideen
June 3, 2024 3:32 pm 0 comment

தைத்த ஆடைகள் துறையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் கௌரவத்தையும் பெற்ற ஸ்ரீயானி ட்ரஸ் பொயின்ட் (Sriyani Dress Point) நிறுவனம், அதன் ஊழியர்களை பாராட்டும் வகையில் “ஶ்ரீயானி ட்ரஸ் பொயின்ட் வர்ண இரவு” எனும் நிகழ்வை, நிறுவனத்தின் தலைவர் மாரியாப்பிள்ளை செல்வராஜ் தலைமையில் கடந்த மே 23ஆம் திகதி கோட்டே, மொனார்ச் இம்பீரியல் ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது.

முப்பது வருடங்களுக்கும் மேலாக நுகர்வோரின் இதயங்களை வென்றுள்ள தைத்த ஆடைகள் உற்பத்தியாளரும், விற்பனையாளருமான ஸ்ரீயானி ட்ரஸ் பொயின்ட், தற்போது கேகாலை, குருணாகல், மாத்தளை, நீர்கொழும்பு, இரத்தினபுரி, கண்டி, பேராதனை, யட்டிநுவர ஆகிய இடங்களில் அதன் விஸ்தீரணமான காட்சியறை வலையமைப்பைக் கொண்டுள்ளது. ஆண்கள், பெண்கள், சிறுவர்ளுக்கான ஸ்டைலான தைத்த ஆடைகள், பாதணிகள், அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும், இலங்கையின் முன்னணி வர்த்தக நாமமாக ஸ்ரீயானி ட்ரெஸ் பொயின்ட் விளங்குகிறது. தனது 1,200 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நட்புறவான சேவைகளை வழங்க நிறுவனம் தன்னை அர்ப்பணித்துள்ளது.

அந்த வகையில், தமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நம்பகமான, உயர் தரமான, நட்பு ரீதியான சேவையை வழங்குவதற்கும், தனது வர்த்தக நாமத்தை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் தனது ஊழியர்களைப் பாராட்டும் வகையில், இந்த வண்ண இரவு அண்மையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இங்கு, சாதாரண பணியாளர்கள் முதல் உயர் முகாமைத்துவ ஊழியர்கள் வரை மதிப்பீடு செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ், தெரிவு செய்யப்பட்ட ஊழியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். ஸ்ரீயானி டிரெஸ் பொயின்ட் வர்த்தக நாமத்தை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக்கும் வகையில் இருபது வருடங்களுக்கும் மேலாக தங்களை அர்ப்பணித்த ஊழியர்களும் இங்கு பாராட்டி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

உயர் செயற்றிறன் விற்பனைக்கான விருது, சிறந்த முகாமையாளர் விருது, சிறந்த காட்சியறை முகாமையாளர் விருது, சிறந்த வாடிக்கையாளர் சேவை உதவியாளர் விருது, விற்பனை ஊக்குவிப்பு விருதுகள், தலைமைத்துவ விருதுகள், சிறந்த களஞ்சிய செயற்பாட்டு முகாமையாளர் விருது, சிறந்த கிளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், ஸ்ரீயானி ட்ரெஸ் பொயின்ட் ஊழியர்கள் இந்த வண்ண இரவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களான மதூஷிகா செல்வராஜ், தினூஷிகா செல்வராஜ், ஷப்ரஜித் செல்வராஜ் உள்ளிட்ட சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT