Tuesday, July 23, 2024
Home » தொடர்மழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்

தொடர்மழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்

- அனர்த்தங்களால் 24 மணித்தியாலங்களில் 10 பேர் உள்ளிட்ட இதுவரை 15 பேர் உயிரிழப்பு

by Prashahini
June 2, 2024 9:19 pm 0 comment

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடி, மழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மழை, வெள்ளம், மண்மேடு சரிவு உள்ளிட்ட அனர்த்தங்கள காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 10 பேர் மரணித்துள்ளதோடு, இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கிரியெல்லவில் மரம் முறிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தும்பரை, அயகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, எலபாதவில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேவாஹின்ன, அவிசாவளையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

அவிசாவளை, புவக்பிட்டியவில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட தாய், அவரது மகள் மற்றும் பாட்டன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

தெய்யந்தர பல்லேவல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT