1.1K
பாணந்துறை நகரில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் நிலையத்துக்கருகில் இடம்பெற்ற இ.போ.ச -தனியார் பஸ் வண்டி விபத்தில் இ.போ.ச பஸ் நடத்துனர் பலியாகியுள்ளார்.
இ.போ.சபையின் கடமைக்கு வந்துகொண்டிருந்த நடத்துனர் பஸ் வண்டியிலிருந்து வெளியே வீசப்பட்ட நிலையில் தனியார் பஸ் வண்டியின் சில்லில் சிக்குண்டு மரணமாகியுள்ளார்.
குறித்த விபத்தின்போ தனியார் பஸ் வண்டி அதிக வேகத்தில் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பாணந்துறை மத்திய குறூப் நிருபர்