– 24 மணித்தியாலங்களில் இதுவரை 6 பேர் மரணம்
புவக்பிட்டிய, எலிஸ்டன் தோட்டம், கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு மரணமடைந்தவர்கள், 36 வயதான தாய், 7 வயது மகள், 78 வயதான பாட்டனார் ஆகியோர் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று (02) அதிகாலை 2.00 – 3.00 மணிக்குட்பட்ட நேரத்தில் வெள்ளப்பெருக்கினால் வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் மூழ்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அவிசாவளை, ஹேவாஹின்ன பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்து அதில் சிக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 11 வயதுடைய சிறுமி என பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மழை, வெள்ளம் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் இதுவரை 6 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெய்யந்தர, பல்லேவெல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Landslide EW Report at 0700hrs on 2024.06.02சீரற்ற வானிலை: ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; வெள்ள எச்சரிக்கை