Thursday, July 25, 2024
Home » சீரற்ற வானிலை: வீடொன்றில் மண்மேடு சரிவு; இரு இளைஞர்கள் பலி

சீரற்ற வானிலை: வீடொன்றில் மண்மேடு சரிவு; இரு இளைஞர்கள் பலி

- கொழும்பு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

by Rizwan Segu Mohideen
June 2, 2024 9:09 am 0 comment

தற்போது நாட்டில் நிலவும் கடும் மழை, வெள்ளம் காரணமாக, தெய்யந்தர, பல்லேவெல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (01) இரவு பதிவான குறித்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து எல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேனகம பிரதேசத்தில் வசித்து வந்த 20, 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் எல்லேவெல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெய்யந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 – 150 மி.மீ. வரையான தொடர் மழைவீழ்ச்சி பதிவின் காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 9 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இதனை விடுத்துள்ளது.

இன்று (02) மு.ப. 7.00 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு இவ்வாறு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்கும், களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களின் ஒரு சில பிரதேச செயலக பிரிவுகளுக்கும் பிரதேசத்தை விட்டு வெளியேறும் வகையிலான அதியுயர் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவப்பு எச்சரிக்கை
கொழும்பு மாவட்டம்:
– பாதுக்கை

களுத்துறை மாவட்டம்:
– மத்துமை
– இங்கிரிய
– பாலிந்தநுவர
– புலத்சிங்கள

இரத்தினபுரி மாவட்டம்:
– குருவிட்ட
– எலபாத
– கிரியெல்ல
– அயகம
– எஹெலியகொடை
– கலவானை
– இரத்தினபுரி

Landslide EW Report at 0700hrs on 2024.06.02

சீரற்ற வானிலை: ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; வெள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் 150 மி.மீ. இற்கும் அதிக மழை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT