Thursday, July 18, 2024
Home » சமாதானத்துக்கான சர்வமத பேரவையின் அமர்வு

சமாதானத்துக்கான சர்வமத பேரவையின் அமர்வு

by mahesh
May 31, 2024 7:19 am 0 comment

உலகில் 140 நாடுகளில் வியாபித்துள்ள சர்வதேச அமைப்பான சமாதானத்துக்கான சர்வமதப் பேரவை, ஆசிய அமைப்புடன் இணைந்து இலங்கை சமாதானத்துக்கான சர்வமதப் பேரவை ஏற்பாடு செய்த இரண்டு நாள் செயற்குழு அமர்வின் இறுதி மாநாடு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சுமார் நாற்பது நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் இறுதி மாநாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கலந்துகொண்டார்.

அமைப்பின் தற்போதைய தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சங்கைக்குரிய கொடபிட்டிய ராகுல அனுநாயக்க தேரர், பொதுச் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வடினாகல பஞ்சாலோக தேரர் கலாநிதி, பெல்லன்வில பிரேமரதன நாயக்க தேரர், வணக்கத்திற்குரிய பிதா கலாநிதி வலன்ஸ் மென்டிஸ், சுவாமி குணானந்த, மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா மற்றும் சமாதான மற்றும் மதத் தலைவர்கள், சமாதானத்திற்கான ஆசிய மாநாட்டின் பொதுச் செயலாளர் யோஷினோரி ஷினோஹரா, பேராசிரியர் டெஸ்மண்ட் கெஹில் ள்ளிட்ட மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT