Friday, June 14, 2024
Home » இஸ்ரேலிய படையுடனான மோதலில் எகிப்து வீரர் பலி

இஸ்ரேலிய படையுடனான மோதலில் எகிப்து வீரர் பலி

by mahesh
May 29, 2024 6:00 am 0 comment

காசாவுடனான ரபா எல்லை பகுதியில் எகிப்து மற்றும் இஸ்ரேலிய துருப்புகளுக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் எகிப்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் எகிப்து மற்றும் இஸ்ரேல் நிர்வாகங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

துப்பாக்கிச் சண்டை தொடர்பில் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டபோதும் அது தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை. இதில் இஸ்ரேலிய தரப்பில் பாதிப்பு ஏற்படவில்லை.

எகிப்துடனான ரபா எல்லைக் கடவையில் காசா பக்கத்தை இஸ்ரேல் மூன்று வாரங்களுக்கு முன்னர் கைப்பற்றியதைத் தொடர்ந்து எகிப்து மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. ரபாவில் உள்ள அகதிகள் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 45க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதற்கு எகிப்து வெளியுறவு அமைச்சு கண்டனத்தை வெளியிட்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

1979 இல் எகிப்து மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் அமைதி உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தானதோடு அது தொடக்கம் இரு தரப்புக்கும் இடையே பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பு நிலவி வருகிறது. குறிப்பாக எகிப்து மற்றும் காசா எல்லை தொடர்பில் இரு தரப்பும் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT