Saturday, June 15, 2024
Home » தமிழ்நாட்டில் கழுதைப்பால் விற்பனை களைகட்டுகிறது!

தமிழ்நாட்டில் கழுதைப்பால் விற்பனை களைகட்டுகிறது!

by mahesh
May 29, 2024 1:40 pm 0 comment

தமிழ்நாடு நிலக்கோட்டை பகுதியில் கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன்படி ஒரு லீட்டர் ரூ.14,000 இற்கு விற்பனை செய்யப்படுகிறது.நிலக்கோட்டை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தினமும் காலை நேரத்தில் கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

ஒரு காலத்தில் பொதி சுமப்பதற்காகவும், மலைப்பகுதிகளில் பாரம் எடுத்துச்செல்லவும் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்ட கழுதைகள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளன. கழுதைப்பால் மருத்துவ குணம் கொண்ட பால் என கூறப்படுவதால், அதன் உரிமையாளர்கள் ஆடு, மாடுகள் போல் வளர்த்து வருகின்றனர்.

இவற்றின் பாலை விற்பனை செய்வதற்காகவே, அதிக எண்ணிக்கையில் வளர்த்து வருகின்றனர்.

இந்தக் கழுதைகளை கூட்டம் கூட்டமாக பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்து சென்று, அவற்றின் பாலை விற்று வருமானம் ஈட்டி வருகின்றனர்.

கழுதைப்பால் குடித்தால் சமிபாட்டுக் கோளாறுகள் நீங்கும், மஞ்சள் காமாலை, டெங்கு, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த எதிர்ப்பு சக்தியை வழங்கும் என்பதுடன் இதில் அதிக ஊட்டச்சத்து உள்ளதாக கூறி கழுதைப்பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கழுதைப்பால் கேட்கும் பொதுமக்களுக்கு, உடனடியாக அந்த இடத்திலேயே பாலை கறந்து தருகிறார்கள். இதனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆர்வமாக பாலை வாங்கி குழந்தைகளுக்குத் தருகின்றனர். இதன்மூலம் ஒரு லீட்டர் கழுதைப்பால் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பசும்பாலை விட கழுதைப்பால் விலை பல மடங்கு அதிகமாக இருந்தாலும், ஒரு நாளைக்கு 1 லீட்டர் வரை விற்பனையாவதாக கழுதை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி மாதந்தோறும் இவர்கள் இலட்சகணக்கான ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர்.

இதற்கிடையே கழுதைப்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதாக, இதுவரை எந்த மருத்துவரும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT