Thursday, July 18, 2024
Home » நுவரெலியாவில் மரம் முறிந்து வீழ்ந்து வீடு தீப்பிடித்தது!

நுவரெலியாவில் மரம் முறிந்து வீழ்ந்து வீடு தீப்பிடித்தது!

by mahesh
May 29, 2024 1:20 pm 0 comment

சீரற்ற காலநிலை காரணமாக கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை ஏற்பட்டுள்ளது. நுவரெலியா பம்பரகலை பகுதியில் நேற்று காலை (28) வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்தமையால் அவ்வீட்டுக்கு செல்லும் மின்வயர் அறுந்து விழுந்து வீடு தீப்பிடித்துள்ளது.

இதனால் வீட்டின் உள் பகுதி முழுமையாக எரிந்துள்ளதுடன் இலத்திரனியல் பொருட்கள் உட்பட அதிகமான பொருட்கள் சேதமடைந்துள்ளன.

வீட்டில், வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த சமயம் வீட்டின் அருகாமையிலிருந்த மரமொன்று காற்றின் வேகத்தாலும் மழையின் தாக்கத்தாலும் வீட்டின்மேல் விழுந்தமையால் வீட்டிற்கு செல்லும் மின்வயர் அறுந்து விழுந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென வீடு தீ பற்றி எரிந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தீப்பரவலுக்கு மின் ஒழுக்கே காரணம் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

தீயினை அயலவர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT