204
களுத்துறை தெற்கு வெட்டுமகட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரயில் வண்டி மோதி மரணமான பரிதாப சம்பவமொன்று 27ஆம் திகதி (27-5-2024) இடம்பெற்றுள்ளது.
களுத்துறை தெற்கு குரே வீதியைச் சேர்ந்த முஹம்மத் இர்பான் முஹம்மத் இமாத் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு மரணமானவராவார்.
கையடக்க தொலைபேசி ஹேண்பிரியை காதில் வைத்தபடி ரயில் பாதையில் சென்றுள்ள நிலையில் இவர் ரயிலுக்கு மோதி உள்ளார் என தெரிய வருகிறது.
களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
(பேருவளை விசேட நிருபர்)