Home » இன்னிசை மாலை நிகழ்வு

இன்னிசை மாலை நிகழ்வு

by Gayan Abeykoon
May 29, 2024 5:17 am 0 comment

அக்ஷரா – வீனஸ் இனிய இசையில் 67ஆவது ‘தேனும் பாலும் கலந்து வசந்த கானங்கள் இன்னிசை மாலை’ கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 07 இல் அமைந்துள்ள பொது நூலக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

IDM Nation Campus International  கல்வி நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில்; பிரதம அதிதியாக  IDM Nation campus  இன் தலைவர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தியும் விேஷட அதிதிகளாக வீரகேசரி பத்திரிகையின் பிரதம நிறைவேற்று அதிகாரி முருகேசு செந்தில்நாதனும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசை கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவரும் ஜனனம் அறக்கட்டளையின் பணிப்பாளருமாகிய அதி வணக்கத்திற்குரிய பிதா அருட் கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோவும் சிறப்பு அதிதிகளாக தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவரும் முன்னாள் பிரதி மேயர் எம்.டி.எம். இக்பாலும்     கலந்து கொண்டனர். இந்திப் பாடகர் அனுபா குணசேகரவும்  இதில் கலந்து கொண்டு இந்திப் பாடல்களைப் பாடி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் கலைஞர்களும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

100

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT