Saturday, June 15, 2024
Home » ஆளுமை வளர்ச்சி பயிற்சிப்பாசறை

ஆளுமை வளர்ச்சி பயிற்சிப்பாசறை

by Gayan Abeykoon
May 29, 2024 5:13 am 0 comment

கிழக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த வருடம் கல்விப்  பொதுத் தராதர சாதாரண பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ஆளுமை வளர்ச்சி பயிற்சிப் பாசறையும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கடந்த  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

றிஸ்லி முஸ்தபா எடியுகேசன் எயிட் இன் அனுசரணையில் கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவர் தானிஷ் ரஹுமத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மயோன் நிறுவனத்தின் பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சிப் பாசறையில் தலைமைத்துவ செயற்பாடு, ஒழுக்கவிழுமியங்கள், சகோதரத்துவ பண்பாடு, தனிநபர் ஆளுமைகள் உட்பட  பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.  பயிற்சி நிறைவின் போது பிரதம அதிதியினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பாலமுனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT