Home » விளைச்சலை அதிகரித்தல்; விழிப்புணர்வு நிகழ்வு

விளைச்சலை அதிகரித்தல்; விழிப்புணர்வு நிகழ்வு

by Gayan Abeykoon
May 29, 2024 5:13 am 0 comment

ஆரையம்பதி விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள சிகரம் கிராமத்தில் மாமரச் செய்கையில் கத்தரித்தல் எனும் நடைமுறைகளினூடாக  விளைச்சலை அதிகரிப்பது தொடர்பான  விழிப்பூட்டல் நிகழ்வு விவசாய திணைக்களத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை  நடத்தப்பட்டது.

ஆரையம்பதி விவசாய போதனாசிரியர் முபீதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கல் பிரதிப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் உட்பட விவசாய போதனாசிரியர்கள்,  விவசாய கமநல அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய  பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது  மாமரச் செய்கையில்  விளைச்சலை அதிகரித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக விவசாய போதனாசிரியர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கல் பிரதிப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், விவசாய கமநல அமைப்புகளினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT