Home » சுகாதார மேம்பாட்டு பயிற்சிப்பட்டறை

சுகாதார மேம்பாட்டு பயிற்சிப்பட்டறை

by Gayan Abeykoon
May 29, 2024 1:00 am 0 comment

மட்டக்களப்பு  மாவட்டத்தின்  14 பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட சுகாதார மேம்பாட்டு பாடசாலைகளை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது தொடர்பாக இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில்  நடைபெற்றது.

சுகாதார மேம்பாட்டுப் பிரிவு மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர் வைத்திய கலாநிதி முரளிஸ்வரன் தலைமையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இப்பயிற்சி பட்டறை நடைபெற்றது.

இதில் சுகாதார வைத்திய அதிகாரிகள்,  சிகிச்சையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், ஆரம்பப்பிள்ளை பராமரிப்பு உத்தியோகத்தர்கள், பாலர் பாடசாலை பணியக உத்தியோகத்தர்களாகிய  பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்புகுறூப்நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT