Home » நற்பிட்டிமுனையில் பிரதேசத்திலுள்ள கல்விச் சாதனையாளர்கள் கெளரவிப்பு

நற்பிட்டிமுனையில் பிரதேசத்திலுள்ள கல்விச் சாதனையாளர்கள் கெளரவிப்பு

by mahesh
May 29, 2024 9:00 am 0 comment

நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயம் சேனைக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய நிருவாக சபை வருடந்தோறும் நடத்தும் மாணவர்களுக்கான கெளரவிப்பு மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு ஆலயத் தலைவர் த.ரவிராஜ் தலைமையில் நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு அதிதிகளாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரம்கின் பக்கீர், நீலாவணை விசேட அதிரடிப்படை தலைமை அதிகாரி R. A. D. C.S. ரத்நாயக்க மற்றும் அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி, நற்பிட்டிமுனை ஆலயங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், பொதுஅமைப்புக்கள் விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, க. பொ. த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான நினைவுச் சின்னம், பணப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டன. அறநெறிப் பாடசாலை மாவர்களுக்கு சீருடைக்கான நிதிப்பங்களிப்பினை A. யோகராஜ், K.தேவகுமார் ஆகியோர் வழங்கிருந்தனர். மேலும் வருகை தந்த அதிதிகளினால் மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

துஜியந்தன் 
(பாண்டிருப்பு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT