Home » மக்கள் உள்ளத்தில் என்றும் வாழும் அதிபர் மர்ஹூம் உபைதுல்லாஹ்

மக்கள் உள்ளத்தில் என்றும் வாழும் அதிபர் மர்ஹூம் உபைதுல்லாஹ்

by mahesh
May 29, 2024 10:00 am 0 comment

அட்டாளைச்சேனை, அல்-ஜென்னா வித்தியாலய முன்னாள் அதிபர் எம்.ஏ.சி.முகம்மது உபைதுல்லாஹ் அண்மையில் காலமானார். 1969.05.15 ஆம் திகதி பிறந்த அன்னார், 2024.05.23 இல் காலமானார்.

அதிபர் மர்ஹூம் உபைதுல்லாஹ் மக்கள் மனங்களில் இடம்பிடித்தவராவார். 1998.01.27 அன்று ஆசிரியராக நியமனம்பெற்ற அவர், 2016.05.09 இல் இலங்கை அதிபர் சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டார். ஆசிரியராகவும், அதிபராகவும் பதவிவகித்த காலங்களில் தனது கடமையை திறமையாக நிறைவேற்றிய ஒருவராக அவர் காணப்பட்டார். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், பாடசாலைகளின் வளர்ச்சிக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் பாடுபட்டார்.

அட்டாளைச்சேனை, ஆலம்குளம் றகுமானியா வித்தியாலய அதிபராக பதவியேற்ற அவர், தனது கடமையை திறமையாக முன்னெடுத்தார். கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்களின் முன்னேற்றத்துக்காக அவர் பாடுபட்டார்.

பாடசாலையின் பௌதீக வள அபிவிருத்தியிலும், மாணவர் கல்வி விருத்தியிலும் அவர் அதிக அக்கறை செலுத்தினார். கடந்த 2019ஆம் ஆண்டு றகுமானியா வித்தியாலயத்தின் 50 வருட நிறைவு பொன்விழாவை கோலாகலமாக நடாத்தினார்.

நாட்டில் நிலவிய எரிபொருள் நெருக்கடியின் போது, மணல் ஏற்றும் டிப்பர் வாகனத்தில் பயணித்து பாடசாலையை சென்றடைந்தார்.

இடமாற்றம் பெற்று, அட்டாளைச்சேனை அல்-ஜென்னா வித்தியாலய அதிபராக கடமையாற்றி வந்த நிலையிலயே அவர் காலமானார். அவரது மரணம் அபிமானிகளை துயரம் கொள்ளச் செய்தது. அவரது ஜனாஸா இறுதி நிகழ்வுகளில் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

முகம்மட் றிஸான் 
(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT