Sunday, June 16, 2024
Home » நுவரெலியா மரக்கறி விலைகளில் மாற்றம்

நுவரெலியா மரக்கறி விலைகளில் மாற்றம்

- இன்றைய நாளுக்கான (29) விலை பட்டியல் வெளியீடு

by Prashahini
May 29, 2024 12:47 pm 0 comment

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக கொள்வனவு மற்றும் விற்பணை செய்யப்படும் கிலோவுக்கான மரக்கறி விலைகளின் இன்றைய நாளுக்குரிய (29) விலை பட்டியலை நிலையத்தின் காரியாலயம் வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற,
முட்டை கோஸ் ரூ. 70 – ரூ. 90
கரட் ரூ. 125 – ரூ. 145
லீக்ஸ் ரூ. 270 – ரூ. 290
ராபு ரூ. 80 – ரூ. 100
இலையுடன் பீட்ரூட் ரூ. 220 – ரூ. 240
இலையில்லா பீட்ரூட் ரூ. 320 – ரூ. 340
உருளை கிழங்கு ரூ. 290 – ரூ. 310
உருளை கிழங்கு சிவப்பு ரூ. 270 – ரூ. 290
நோக்கோல் ரூ. 100 – ரூ. 120 என மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் உயர் தர சமையலுக்கு பாவிக்கப்படும் கொத்தமல்லி இலை கிலோ ஒன்றின் விலை ரூ. 1800 – ரூ. 1900 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அதேபோல,
சலாது ரூ. 1100 – ரூ. 1200
புரக்கோலின் ரூ. 1000 – ரூ. 1100
கோலிப்ளவர் ரூ. 1000 – ரூ. 1100 என ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக விலையில் கொள்வனவு மற்றும் விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆ.ரமேஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT