758
2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இவ்வார இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக, இலங்கை பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றிருந்தது.
பரீட்சையில் 3,46,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 2,81,445 பாடசாலை பரீட்சார்த்திகளும், 65,531 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.