Sunday, June 16, 2024
Home » தமிழ் தரப்பு பொது வேட்பாளர் ஜூன் 09 இல், கருத்துப் பரிமாறல்

தமிழ் தரப்பு பொது வேட்பாளர் ஜூன் 09 இல், கருத்துப் பரிமாறல்

- யாழ் நகரில் எம்.ஏ. சுமந்திரன் MP ஏற்பாடு

by Rizwan Segu Mohideen
May 28, 2024 8:20 am 0 comment

தமிழர் தரப்பு பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்துக்களை பரிமாறும் நிகழ்வை நடத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடகச் சந்திப்பிலேயே, இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர் தரப்பு பொது வேட்பாளர் தொடர்பிலான முன்னெடுப்புக்களை செய்துவரும் சிவில் சமூக பிரதிநிதிகள், பத்தி எழுத்தாளர்கள் உள்ளிட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் என்னை நேரில் சந்தித்து கலந்துறையாடினர்.

பொது வேட்பாளர் தொடர்பிலான எனது நிலைப்பாட்டை அவர்களுக்கு கூறினேன்.

அவர்களும், பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பிலான தமது கருத்துக்களையும் கூறினர்.

பொது வேட்பாளர் தொடர்பில் பொது வெளியில் கருத்துக்களை பரிமாறும் நிகழ்வை நடத்தி, அதில் ஆரோக்கியமான கலந்துரையாடலை நடத்தலாமென நான், தெரிவித்திருந்தேன். அதற்கு அவர்களும் சம்மதித்தனர்.

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் (09) பொது வேட்பாளர் தொடர்பில் கருத்துக்களை பரிமாறும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாது, கருத்துக்களை முன் வைத்து ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் நடைபெற்றால் மக்களுக்கும் தெளிவு கிடைக்கும். இதற்காகவே, இந்நிகழ்வை ஒழுங்கமைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT