Sunday, June 16, 2024
Home » தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பம் கோரல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பம் கோரல்

- இணையவழியில் ஜூன் 14 வரை சமர்ப்பிக்கலாம்

by Rizwan Segu Mohideen
May 28, 2024 8:07 am 0 comment

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை நேற்று (27) முதல் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜூன் (14 ) வரை இணையவழி முறையூடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

http://www.onlineexams.gov.lk ஊடாக விண்ணப்பிக்கலாம் ஜூன் (14)நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு இணையவழி விண்ணப்பங்களை ஏற்பது நிறுத்தப்படும். விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படமாட்டாது.

அரசாங்க பாடசாலைகள் அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில், தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மட்டுமே புலமைப்பரிசில் பரட்சைக்கு தோற்ற முடியும்.

www.onlineexams.gov.lk என்ற இணையத் தளத்துக்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். இது தொடர்பில் சிக்கல்கள் இருப்பின், பரீட்சை திணைக்களத்தின் 1911 அல்லது 011-2 784537 அல்லது 0112 786616 அல்லது 0112 784208 என்ற அவசர இலக்கங்களுக்கு அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT