Home » உலகின் மூன்றாவது பாரிய பொருளாதார நாடாகும் இந்தியா

உலகின் மூன்றாவது பாரிய பொருளாதார நாடாகும் இந்தியா

- IMF தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
May 27, 2024 3:20 pm 0 comment

2027 ஆம் ஆண்டாகும் போது உலகின் மூன்றாவது பாரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

இந்நிதியம் மேற்கொண்டுள்ள மதிப்பீட்டில், இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தி அடுத்துவரும் மூன்றாண்டுகளில் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளைப் பின்தள்ளி ஐந்து ரில்லியன் டொலர்களைக் கொண்ட இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உலகளவில் ஆங்கிலம் பேசக்கூடிய மக்கள் தொகையைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடாக விளங்கும் இந்தியாவில் வருடா வருடம் இருபது இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டதாரிகளாக வெளியாகின்றனர். இந்நாடு ஸ்டெம் கல்வியில் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது. அதன் பயனாக நன்கு கல்வி அறிவைப் பெற்ற தொழிலாளர் படை இங்கு அதிகரித்து வருகின்றது.

அதேநேரம் மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் மேற்காபிரிக்காவுக்கு அருகிலான இந்தியாவின் மூலோபாய அமைவிடம், தென்கிழக்கு ஆசியா, கிழக்காசியப் பிராந்தியங்கள் வரையும் கடல் வழியாக வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சிறந்த இடமாகவும் இந்தியா மாற்றமடைகிறது.

உலகளாவிய விநியோகச் சங்கிலியில் வளர்ந்துவரும் முக்கிய நாடான இந்தியா தொழிலாளர் மற்றும் நுகர்வோர் தொடர்பில் பாரிய தளத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. குறைந்த செயற்பாட்டு செலவுகள் மற்றும் முக்கியமான சர்வதேச சந்தைகளுக்கான இணைப்புக்கள் காரணமாக உற்பத்தியாளர்களுக்கும் விநியோகச் சங்கிலியின் பல்வகைமைக்கும் நம்பகமான மாற்று இடமாகவும் இந்தியா வளர்ந்து வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT