Saturday, July 20, 2024
Home » நாளை கனடா செல்ல இருந்தவர் விபத்தில் மரணம்

நாளை கனடா செல்ல இருந்தவர் விபத்தில் மரணம்

- சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் சம்பவம்

by Rizwan Segu Mohideen
May 27, 2024 9:57 pm 0 comment

கனடா செல்வதற்கு தயாராக இருந்த இளைஞன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – புத்தூர் வீதியில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து, மதில் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மட்டுவில் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பி. பானுஜன் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை விபத்தில் உயிரிழந்த இளைஞன் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கனடா நாட்டிற்கு பயணம் ஆவதற்கு தயாராக இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்னர்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT