Sunday, June 16, 2024
Home » முள்ளியவளையில் 23 வயது பெண் மரணம்; கணவர் மற்றும் 2 பெண்கள் கைது!

முள்ளியவளையில் 23 வயது பெண் மரணம்; கணவர் மற்றும் 2 பெண்கள் கைது!

- கிணற்றில் வீழ்ந்து மரணித்ததாக பொலிஸில் முறைப்பாடு

by Rizwan Segu Mohideen
May 27, 2024 9:04 pm 0 comment

முள்ளியவளையில் இளம் பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் கணவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பூதன் வயல் கிராமத்தில் 23 வயதுடைய இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இருபெண்கள் உள்ளிட்ட மூவரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் பூதன் வயல் கிராமத்தினை சேர்ந்த இளைஞனை திருமணம் செய்து 7 மாதங்களாக வாழ்ந்துவந்த வவுனியா ஆச்சிகுளம் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பபெண் தனது கணவருடன் பூதன்வயல் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்றையதினம் (26) வீட்டிலிருந்த மனைவி கிணற்றில் வீழ்ந்து இறந்துள்ளதாக முறைப்பாடு செய்வதற்காக கணவன் பொலிஸ் நிலையம் சென்றுள்ளநிலையில் பொலிஸ் வரமுன்னர் அயலவர்கள் கிணற்றில் வீழ்ந்த பெண்ணை மீட்டு உழவு இயந்திரத்தில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

பெண் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ள நிலையில் இன்று (27) சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசேதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளை குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த பெண்ணின் கணவர் மற்றும் கணவருடன் வாழ்ந்துவந்த நெடுங்கேணியினை சேர்ந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மற்றுமொரு பெண் ஆகிய முவரையும் முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.

இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.

(புதுக்குடியிருப்பு விசேட நிரூபர்)

மனைவியைக் கொன்று வீட்டின் பின் புதைத்த கணவன்!

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT