338
வெற்றிலைக்கேணி புனித செபஸ்தியார் விளையாட்டு கழகத்தால் நடாத்தப்படும் அணிக்கு 07 பேர் கொண்ட வட மாகாண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் அல்வாய் நண்பர்கள் விளையாட்டு கழகத்திற்கு எதிராக முல்லைத்தீவு புனித ஜூட்ஸ் அணியினர் 04–02 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
இப் போட்டியில் புனித ஜூட்ஸ் அணி சார்பாக றிப்கான் மற்றும் மென்டிஸ் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் புகுத்தினர். போட்டியின் சிறந்த வீரராக புனித ஜூட்ஸ் கழகத்தின் வீரர் றிப்கான் தெரிவு செய்யப்பட்டார்.
மாளிகைக்காடு குறூப் நிருபர்