Thursday, July 25, 2024
Home » சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை நேற்றுடன் நிறைவு

சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை நேற்றுடன் நிறைவு

by mahesh
May 25, 2024 8:16 am 0 comment

ஆறு மாதகாலமாக இடம்பெற்று வந்த சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை நேற்று வெள்ளிக்கிழமையுடன் (24) நிறைவு பெற்றுள்ளது.

சிவனொளிபாதமலை உச்சியில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்த பூஜைப் பொருட்கள் மற்றும் புனித விக்கிரங்கள் அனைத்தும் நேற்றையதினம் நல்லதண்ணியில் இருக்கும் விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்னவினால் பிரித் ஓதப்பட்டு மேற்படி பூஜைப் பொருட்கள் மற்றும் புனித விக்கிரகங்கள் இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் இரத்தினபுரி பெல்மதுளை ரஜமகா விகாரைக்கு வாகன தொடரணியாக எடுத்து செல்லப்படும்.

நோட்டன் லக்ஷபான வழியாக கிதுல்கலை, கரவனல்ல, தெகியோவிட்ட, யட்டியாந்தோட்டை, அவிசாவளை வழியாக இரத்தினபுரி ரஜமகா விகாரைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு பூஜைக்காக வைக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் பௌர்ணமி தினத்தில் வழிபாட்டுக்காக சிவனொளிபாதமலைக்கு மீண்டும் கொண்டு வரப்படவுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பமன சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவ காலத்தில் வழமை போன்று இம்முறையும் பல இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கான யாத்திரையை மேற்கொண்டிருந்ததாக சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT