Home » தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்: மே 26 – ஜூன் 01 வரை பிரகடனம்

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்: மே 26 – ஜூன் 01 வரை பிரகடனம்

- இம்மாதம் மாத்திரம் 9 பேர் மரணம்

by mahesh
May 25, 2024 12:01 pm 0 comment

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நாளை 26ஆம் திகதி முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால், அதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி நாளை 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை நடைபெறவுள்ள டெங்கு ஒழிப்பு வாரத்தின் போது கல்வி அமைச்சினூடாக மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அறிவிக்கும் நோக்குடன் விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரச நிறுவனங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், புதிய குடியிருப்புகள் போன்றவற்றை சுற்றிப் பரவும் டெங்கு அபாயத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய சாகல ரத்நாயக்க, இதனை கடைப்பிடிக்காதவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

மே மாதத்தில் மட்டும் 1,810 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், ஒன்பது மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x