Sunday, July 14, 2024
Home » ரபா தாக்குதல்: சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு இன்று

ரபா தாக்குதல்: சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு இன்று

by mahesh
May 24, 2024 2:58 pm 0 comment

ரபாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை நிறுத்தக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா தொடுத்த வழக்கின் தீர்ப்பு இன்று (24) வழங்கப்படவுள்ளது.

பலஸ்தீன மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காசாவில் குறிப்பாக ரபாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துவதற்கு உத்தரவிடும்படியே தென்னாபிரிக்கா நீதிமன்றத்தை கேட்டது. இது தொடர்பிலான விசாரணை கடந்த வாரம் இடம்பெற்றது.

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் தொடுத்த இனப்படுகொலை வழக்கின் ஓர் அங்கமாகவே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் கடந்த ஜனவரியில் இடம்பெற்ற ஆரம்பக்கட்ட விசாரணைக்குப் பின்னர் காசாவில் மனிதாபிமான நெருக்கடியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது உட்பட பல இடைக்கால நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT