238
அட்டாளைச்சேனை கல்விக் கோட்டமட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணி வெற்றி பெற்று சம்பியனாகி அக்கரைப்பற்று கல்வி வலயமட்டப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (22) கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். றஸ்மி தலைமையில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் பாலமுனை அல்–ஹிக்மா வித்தியாலய 18 வயதுக்கு உட்பட்ட அணியை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணியினர் 2–0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்