Thursday, July 18, 2024
Home » சஹ்வா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்த மலேஷிய உயர்ஸ்தானிகர்

சஹ்வா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்த மலேஷிய உயர்ஸ்தானிகர்

by mahesh
May 24, 2024 12:15 pm 0 comment

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் இயங்கி வரும் சஹ்வா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு மலேஷிய உயர் ஸ்தானிகர் விஜயம் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ. ஆர்.எம். மன்சூரின் புதல்வரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹுமத் மன்சூரின் வேண்டுகோளையடுத்து மலேஷியா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், மற்றும் வை. டப்ளியூ. எம். ஏ. அமைப்பின் தலைவி பவாஷா தாஹா ஆகியோர் அக்கல்லூரிக்குச் சென்று அங்கு நிலவும் தேவைகள் குறித்து கவணம் செலுத்தினர்

அரபுக் கல்லூரியின் வளாகம், பொதுநூலகம் என்பவற்றைப் பார்வையிட்ட அதிதிகள் கல்லூரயில் கல்வி பயிலும் மாணவர்களுடனும், நிருவாகத்தினருடனும் கலந்துரையாடினர்.

மலேசியாவிலுள்ள சிறந்த பல்கலைக்கழகமொன்றுடன் ஒன்றிணைத்து கல்வித் தரத்தினை மேம்படுத்தி எதிர்காலத்தில் சிறந்த மாணவிகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கல்லூரியின் நிருவாகத்தினர் உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக் கொண்டனர்.

எம்.எப்.றிபாஸ் 
(பாலமுனை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT