Thursday, July 18, 2024
Home » காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலை அதிபர் ஓய்வு

காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலை அதிபர் ஓய்வு

by mahesh
May 24, 2024 12:13 pm 0 comment

காத்தான்குடி. மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 2012.01.26 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரை அதிபராகக் கடமையாற்றி பாடசாலையின் கல்வி, பௌதிகவள அபிவிருத்தியிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தன்னை முற்றாக அர்ப்பணித்து கடமையாற்றிய அதிபர் திருமதி ஜெஸீமா முஸம்மில் நாளை 25.05. 2024 இல் அரசபணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

இவர் மர்ஹூம்களான மீரா முகைதீன்_ஆமினா உம்மா தம்பதிகளுக்கு புதல்வியாக 26.05.1964 இல் பிறந்தார்.தனது ஆரம்பக் கல்வியை மட்/மம/மெத்தைப்பள்ளி வித்தியாலயத்திலும் இடைநிலை, உயர்தர, கல்வியை மட்/மம/ மத்திய கல்லூரி தேசிய பாடசாலையிலும் கற்றார். இவர் தனது பாடசாலைக் காலத்தில் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் மிகவும் திறமையாக செயற்பட்டு ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்தார்.

1985 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கலைமாணி பட்டத்தை பெற்றுக் கொண்டார். 1987 இல் நடைபெற்ற ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட இவர் 03.10.1988 இல் மட்/மம/ மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் முதலாவதாக கடமையை ஏற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் அல்ஹிறா வித்தியாலயத்திலும், மீராபாலிகா தேசிய பாடசாலையிலும் தனது கடமையை மேற்கொண்டார். தனது 36 வருட சேவைக் காலத்தில் 31 வருட காலம் மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையிலேயே அரசியல்,வரலாறு பாட ஆசிரியராக, பகுதித் தலைவராக, பிரதி அதிபராக, கடமை நிறைவேற்று அதிபராக கடமையாற்றி 2012.01.26 இல் அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று SLPS – 2 II அதிபராக கடமையை பொறுப்பேற்றார். SLPS-2, SLPS – 1 அதிபராக பல பதவி உயர்வுகளை பெற்று தான் முதலில் நியமனம் பெற்ற பாடசாலையில் இருந்தே ஓய்வு பெற்றுச் செல்கிறார்.

மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இவர்கள் அதிபராக கடமையாற்றிய காலம் வரலாற்றில் ஒரு பொற்காலமாகும். தன்னுடன் கடமையாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர் குழாத்துடனும், மாணவர்களுடனும்,கல்வி சாரா ஊழியர்களுடனும், பாடசாலை சமூகத்துடனும் மிகவும் அன்பாக பழகினார்.

இவர் அப்பாடசாலையின் அபிவிருத்திக்காக ஆற்றிய பணிகள் ஏராளம். பாடசாலை மாணவர்களின் கல்வித்தரம் உயர்வதற்கு அயராது பாடுபட்டார்.

ஷகீலா அப்துர் ரஹ்மான் 
பழைய மாணவர் சங்க செயலாளர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT