Sunday, July 14, 2024
Home » அமைச்சரவையில் எத்தகைய அறிவிப்பும் விடுக்கப்படவில்லை
பாராளுமன்றம் கலைப்பது தொடர்பில்

அமைச்சரவையில் எத்தகைய அறிவிப்பும் விடுக்கப்படவில்லை

அமைச்சர் பந்துல குணவர்தன

by mahesh
May 24, 2024 12:03 pm 0 comment

நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்புக்கு இணங்க இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமென்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக, அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தேர்தல் ஆணையாளரால் தீர்மானிக்கப்படும் திகதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமென்று அமைச்சரவையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.

எந்த வகையிலும் பாராளுமன்றம் கலைக்கப்படுமென அமைச்சரவையில் எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாதெனவும் அது சில தரப்பினரின் பகல் கனவெனவும், அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக பல்வேறு பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வாறு பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி அமைச்சரவையில் எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லையெனவும், அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர்,

“கடந்த வாரத்தில் பல்வேறு தரப்பினராலும் ஜனாதிபதி தேர்தலுக்கு பதிலாக பாராளுமன்ற தேர்தலை

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT