Sunday, June 16, 2024
Home » நிதி மோசடி குற்றச்சாட்டில் Aura Lanka குழும தலைவர் கைது

நிதி மோசடி குற்றச்சாட்டில் Aura Lanka குழும தலைவர் கைது

by sachintha
May 23, 2024 6:15 am 0 comment

மே 27 வரை விளக்கமறியல்

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் Aura Lanka குழும நிறுவனங்களின் தலைவர் விரஞ்சித் தம்புகல Viranjith Thambugala பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (22) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 27 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தம்புகலவின் வர்த்தக நடவடிக்கைகள் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்பட்டுள்ளன.

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் அனுமதியின்றி நுழைந்தமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து இவர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT