மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 14 ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. ஒன்பது நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று இன்று வியாழக்கிழமை தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது. அதனை அடுத்து அன்னதானம், திருப்பொன்னூஞ்சல் வைரவர் பூசை ஆகியவை நடைபெற்று உற்சவம் நிறைவுறும்.
2001ஆம் ஆண்டு சித்திரைமாதம் இந்த ஆலயம் தரைமட்டமாக இடிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு மீண்டும் தெய்வ அருள் கூடிவர புது ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.இதுவரை அமைந்திருந்த ஆலயத்தை விடவும் பெரிதாகவும் அழகாகவும் ஆலய விதிகளுக்கு அமைய உள்ளூர், வெளியூர்வாழ் மக்களின் பொருளாதார உதவியுடன் மிகச்சிறப்பாக கட்டப்பட்டு 2018ஆம் ஆண்டு ஆவணி மாதம் பிரதம குருவான சிவஸ்ரீ.மு.சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் தலைமையில் கும்பாபிசேகம் நடைபெற்றது.
அக்காலத்தில் ஆலய அர்ச்சகராக சிறந்த முறையில் பணியாற்றியவர் சிவஸ்ரீ திரு. ஜனேந்திராசா குருக்கள் ஆவார். அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கொடியேற்றம் திருவிழா என்பவை கிரியைகளுடன் ஆரம்பித்து பூரணைத்தீர்தோற்சவத்துடன் நிறைபெற்று வருகின்றது.
இவ்வருடம் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ சு.கு விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையில் மஹா உற்சவம் சிறப்புறநடைபெறுகிறது.
நாராயணப்பிள்ளை நாகேந்திரன்…
ஓய்வுநிலை அதிபர், களுவாஞ்சிகுடி