Saturday, November 2, 2024
Home » சீரற்ற வானிலை: சுமார் 3 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு மின் தடை

சீரற்ற வானிலை: சுமார் 3 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு மின் தடை

- 36,900 இற்கும் அதிக மின் விநியோக தடங்கல் சம்பவம்

by Rizwan Segu Mohideen
May 23, 2024 1:24 pm 0 comment

– அறிவிக்க 1987 இலக்கம், SMS, CEB Care செயலி, இணையம்

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000 இற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், குறித்த காலப் பகுதியில் மின் விநியோகத் தடை தொடர்பில் 36,900 சம்பவங்கள் இலங்கை மின்சார சபைக்கு பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதில் மேலதிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 24 மணித்தியாலங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் கஞ்சன தனது பதவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மின்சார பாவனையாளர்கள் மின் விநியோகத்தில் ஏற்படும் தடங்கள் தொடர்பில் மின்சார சபையின் 1987 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்த முடியாத நிலையில், SMS அனுப்புவதன் மூலம் (BD இடைவெளி மின்சார கணக்கு இலக்கம் என டைப் செய்து 1987 இற்கு அனுப்புதல்), CEB Care செயலி, இணையத்தளம் (cebcare.ceb.lk/Incognito/NewComplain) மூலம் மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க முடியும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

சீரற்ற வானிலை: மின்கம்பி வீழ்ந்து அனர்த்தம்; மின்சாரத் தடை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x