Sunday, June 16, 2024
Home » தரம் 05 புலமைப்பரிசில் 2024 செப்டெம்பர் 15ல் நடத்த முடிவு

தரம் 05 புலமைப்பரிசில் 2024 செப்டெம்பர் 15ல் நடத்த முடிவு

by sachintha
May 23, 2024 7:50 am 0 comment

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (2024) எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 இல், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம்நேற்று அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப்படிவங்கள் எதிர்வரும் 27 லிருந்து ஜூன் மாதம் 14 வரை நிகழ்நிலை (Online) முறைமையில் ஏற்றுக்கொள்ளப்படும். ஜூன் மாதம் (14) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் நிகழ்நிலை முறைமை மூடப்படும். எக்காரணத்திற்காகவேனும் விண்ணப்பப் படிவங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி, நீடிக்கப்பட மாட்டாதென்பதை கவனத்திற் கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அரசாங்கப் பாடசாலையில் அல்லது அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெற்ற பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே தோற்ற முடியும்.

2025 ஜனவரி 31 ஆம் திகதியன்று 11 வயதுக்குக் குறைந்த, குறைந்த வருமானம் உடைய மாணவர்களுக்கு மாத்திரமே உதவிப் பணம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள், பிரமாணங்கள் ஆகியவற்றை https:onlineexams.gov.lk/eicஊடாக பிரவேசித்து பெற்றுக் கொள்ள முடியும்.

விசேட தேவைகளுடைய மாணவர்களுக்காக விண்ணப்பிக்க வேண்டிய விதம் தொடர்பான அறிவுறுத்தல்கள், அறிவுறுத்தற் பத்திரத்தில் விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொலைபேசி இலக்கம் – 011-2784537, 011 – 2786616, 011- 2784208, 011-2786200, 011-2784201 அல்லது மின்னஞ்சல் முகவரி – [email protected] அல்லது நேரடித் தொலைபேசி இலக்கம் – 1911, தொலைநகல் இலக்கம் – 011-2784422 ஆகியவற்றுடன் தொடர்புகொள்ளலாம் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT