Sunday, June 16, 2024
Home » சர்வதேசத்தின் ஒத்துழைப்பின்றி நாட்டை கட்டியெழுப்ப முடியாது

சர்வதேசத்தின் ஒத்துழைப்பின்றி நாட்டை கட்டியெழுப்ப முடியாது

by sachintha
May 23, 2024 7:20 am 0 comment

சர்வதேசத்தின் ஒத்துழைப்பின்றி நாட்டை ஒரு போதும் முன்னேற்ற முடியாதென, ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கு சர்வதேச ரீதியில் கடனுதவிகளை பெற்றுக் கொள்ள நேரிடும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் பயணிக்கும் பாதையிலிருந்து மாறி, வேறு மாற்று வழிக்கு சென்றால் நாட்டுக்கு ஏற்படும் அழிவுக்கு தனியாகவோ அல்லது ஒருமித்தோ தற்போதைய அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே,

அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், பாராளுமன்றத்தில் இரண்டு சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நாட்டின் நிதி பொறுப்பு பாராளுமன்றத்திற்கே உரியது.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்களால் நாட்டைப் பாதுகாக்க முடியாதென தெரிவித்து, எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல மாற்று வேலைத் திட்டம் ஒன்றை சபையில் முன் வைத்தார். புதிய அரசாங்கத்துக்கு அதனை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இது முற்றிலும் தவறான எண்ணம்.

2001 ஆம் ஆண்டிலிருந்தே நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை நோக்கி, பயணிக்க ஆரம்பித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சுதந்திரத்துக்குப் பின்னர் 1.4 ஆக காணப்பட்டது. அப்போது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமைக்கு சமமான நிலை நாட்டில் உருவாகியது.

வட்டி வீதம் அதிகரித்தது. அந்நிய செலாவணி வீதம் கட்டுப்படுத்த முடியாமல் போனது என அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT