Sunday, June 16, 2024
Home » ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் நின்றவாறே அதற்கு எதிர்ப்பு

ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் நின்றவாறே அதற்கு எதிர்ப்பு

by sachintha
May 23, 2024 7:10 am 0 comment

தமிழ் மக்களை ஏமாற்றும் செயலென டக்ளஸ் சாடல்

ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு ஒற்றையாட்சி வேண்டாமென்று கூறுவது சுத்த ஏமாற்றுத்தனமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்ட சமூகமல்ல தமிழ் மக்களின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட தவறான வழிமுறைகள் தான் தோற்கடிக்கப்பட்டுள்ளதென்றும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பியின் நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளே தற்போது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர், கட்சியின் வேலைத் திட்டங்களும் கருத்துக்களும் பரந்துபட்டளவில் மக்கள் மத்தியில் செல்லும் வகையில், கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டுமெனவும் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிடுள்ளார். இச்சந்திப்பில் ஈ.பி.டி.பி. கட்சியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கி.பி ஆகியோரும் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT