Home » ஞானம் பெற புத்தர் கொண்ட உறுதிப்பாட்டை அனைவரும் வளர்ப்போம்

ஞானம் பெற புத்தர் கொண்ட உறுதிப்பாட்டை அனைவரும் வளர்ப்போம்

- ஜனாதிபதியின் வெசாக் தின செய்தி

by sachintha
May 23, 2024 6:55 am 0 comment

கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல், பரிநிர்வாணத்தை நினைவுகூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளே வெசாக் தினம் ஆகும்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பௌத்தர்கள் விளக்குகளை ஒளிரவிட்டு, வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, மிகுந்த பக்தியுடன் இதனைக் கொண்டாடுகின்றனர்.

“சிறந்த நாளைக்காக இன்றே தியாகம் செய்வோம்” என்ற கௌதம புத்தரின் போதனையின் அடிப்படையில் ஞானம் பெறுவதற்காக புத்தர் கொண்டிருந்த பெரும் உறுதிப்பாட்டை, ஒரு நாடாக இந்த இக்கட்டான தருணத்தில் நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

“சப்பத்த சம்மானசோ” அனைவரையும் சமமாக நடத்தும் பௌத்த உபதேசத்தை இன்று நாம் நினைவுகூர வேண்டும். அதேபோல் ஒரு நாடாக அதை நடைமுறையில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இனம், மதம், சாதி, கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பப்படும் இந்நாட்டை தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு புத்தரின் போதைனைகள் வழிகாட்டும்.

விரைவான பௌதிக வளர்ச்சியை நோக்கி நகரும் உலகில் மனவளர்ச்சியுடன் கூடிய ஆன்மீக மற்றும் கண்ணியமான ‘மனிதனை’ உருவாக்குவதே இந்த வெசாக் பண்டிகையின் முக்கிய நோக்கம் என்பதை நினைவில் வைத்து, அனைவருக்கும் சிறந்த வெசாக் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT