Home » அமெரிக்கா செல்வதற்கு குசலுக்கு வீசா கிடைத்தது

அமெரிக்கா செல்வதற்கு குசலுக்கு வீசா கிடைத்தது

by mahesh
May 22, 2024 7:16 am 0 comment

இலங்கை வீரர் குசல் மெண்டிஸுக்கு ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்கான அமெரிக்க வீசா தாமதத்திற்குப் பின் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர் அடுத்த சில நாட்களில் அமெரிக்கா சென்று இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.

ரி20 உலகக் கிண்ணப் போட்டி எதிர்வரும் ஜூன் 01 தொடக்கம் 29 ஆம் திகதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்கான இலங்கை அணி கடந்த வாரம் அமெரிக்கா சென்று பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது.

எனினும் ஆரம்ப வரிசை வீரராக குசல் மெண்டிஸுக்கு வீசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அமெரிக்கா செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. குசலிடம் அமெரிக்க தூதரகம் மேலதிக தகவல்களை கோரிய நிலையிலேயே இந்தத் தாமதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

எனினும் அவரது வீசா மறுக்கப்படவில்லை என்று இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இலங்கை அணி எதிர்வரும் 28 ஆம் திகதி நெதர்லாந்துடன் முதல் பயிற்சிப் போட்டியில் ஆடவுள்ளது. தொடர்ந்து மே 31 ஆம் திகதி இரண்டாவது பயிற்சிப் போட்டில் அயர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் புளோரிடா பிரோவாட் கௌன்டி அரங்கில் நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT