Home » எல்.பி.எல். வீரர்கள் ஏலத்தில் மதீஷவுக்கு சாதனை விலை

எல்.பி.எல். வீரர்கள் ஏலத்தில் மதீஷவுக்கு சாதனை விலை

by mahesh
May 22, 2024 8:02 am 0 comment

லங்கா பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக தொகையான 120,000 அமெரிக்க டொலர்களுக்கு இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண விலைபோயுள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று (21) கொழும்பில் இடம்பெற்றது. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல். தொடரில் ஆடும் 21 வயது மதிஷ பதிரணவை வாங்க அணிகள் கடும் போட்டியிட்டன.

ஆரம்பத்தில் தம்புள்ள அணி அவரை 70,000 டொலருக்கு ஏலம் கேட்ட நிலையில் கோல் மார்வல்ஸ் அந்த விலையை 100,000 டொலர்களாக உயர்த்தியது. கடைசியில் கொலம்போ ஸ்ட்ரைகர்ஸ் அவரை 120,000 டொலர்களுக்கு தக்கவைத்துக்கொண்டது.

இது இந்திய பிரீமியர் லீக்கில் அவருக்கான விலையை விடவும் ஐந்து மடங்கு அதிகமாகும்.

மதீஷ 50 ஆயிரம் அடிப்படை விலைக்கே நேற்று ஏலம் விடப்பட்டார்.

இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை 1 தொடக்கம் 21 ஆம் திகதி வரை ஐந்து அணிகளுடன் நடைபெறவுள்ளது. இதற்காக நேற்று நடந்த ஏலத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு என 424 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.

மதீஷ பதிரணவுக்கு அடுத்து சகலதுறை வீரர் இசுரு உதானவை கோல் மார்வல்ஸ் அணி 100,000 டொலருக்கு வாங்கியது. வெளிநாட்டு வீரர்களில் ஆப்கானிஸ்தானின் கரீம் ஜனட்டை தம்புள்ள தண்டர்ஸ் 80,000 டொலர்களுக்கு வாங்கியது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க ஜப்னா கிங்ஸ் அணிக்கு 40,000 டொலருக்கு விலைபோனார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT