Thursday, June 20, 2024
Home » ஒலுவில் பிரதேச மீனவர் நலன்கருதி பொதுக்கிணறு திறந்து வைப்பு

ஒலுவில் பிரதேச மீனவர் நலன்கருதி பொதுக்கிணறு திறந்து வைப்பு

by mahesh
May 22, 2024 9:50 am 0 comment

ஒலுவில் பிரதேசத்தில் மீனவர்களின் நன்மை கருதி பொதுக்கிணறு திறந்து வைக்கப்பட்டது. ரஹ்மத் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் வை.டப்ளியூ.எம்.ஏ. பேரவையின் ஒருங்கிணைப்பில் கட்டப்பட்ட இப்பொது கிணற்றை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது.கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற நிகழ்வுக்கு இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் எச்.இ.பட்லி ஹிஷாம் ஆதம் பிரதம அதிதியாகவும், வை. டப்ளியூ.எம்.ஏ. அமைப்பின் தலைவி பவாஸா தாஹா கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கருகாமையில் மீனவர் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், பொதுமக்கள் என பலரும் இப்பொதுக் கிணற்றை பயன்படுத்துவதுடன் கலந்து கொண்ட அதிதிகளினால் கிணற்றுக்கருகாமையில் தென்னை மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

பாலமுனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT