Sunday, June 23, 2024
Home » இலங்கை மகளிர் சாரணிய இயக்கத்தின் 107 வருட பூர்த்தி

இலங்கை மகளிர் சாரணிய இயக்கத்தின் 107 வருட பூர்த்தி

by mahesh
May 22, 2024 9:50 am 0 comment

இலங்கை மகளிர் சாரணிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 107 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கண்டி மற்றும் இரத்தினபுரியில் மாபெரும் பேரணிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றன.

‘இன்றைய வலுவூட்டும் சிறுமி, நாளை வலுவூட்டும் மங்கையாவாள்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை சாரணர் இயக்கத்தின் மகளிர் பிரிவினர் கண்டியில் பேரணியை ஒழுங்கு செய்ததுடன், கண்டி மஹாமாயா மகளிர் கல்லூரிவரை இப்பேரணி சென்றது. இதன் பின்னர் மஹாமாயா மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நினைவுப் பேருரையும் நடைபெற்றது.

இதில் 1,300 பெண் சாரணர்கள் கலந்து கொண்டதுடன், இதற்கு பேராதனை பல்கலைக்கழக பௌதீகவியல் பிரிவின் பேராசிரியை கலாநிதி சுரங்கிகா வடுகொட தலைமை தாங்கினார்.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்திலும் சாரணியர் இயக்க பேரணி நடைபெற்றதுடன், இரத்தினபுரி தர்மபால மகா வித்தியாலயத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி இரத்தினபுரி விளையாட்டு அரங்குவரை சென்றது. இரத்தினபுரி மாவட்ட மகளிர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியில் 30 பாடசாலை மாணவிகள், சாரணியர்கள், சிறு பிள்ளைகள், மகளிர் சாரணிய தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 500 க்கும் அதிகளவான மகளிர் சாரணியர்கள் கலந்து கொண்டனர்.

அக்குறணை குறூப், பலாங்கொடை தினகரன் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT