Sunday, June 16, 2024
Home » மின்னல் தாக்கம் காரணமாக வீடு, மின் உபகரணங்கள் – முற்றாக சேதம்

மின்னல் தாக்கம் காரணமாக வீடு, மின் உபகரணங்கள் – முற்றாக சேதம்

கஹடகஸ்திகிலய பிரதேசத்தில் சம்பவம்

by mahesh
May 22, 2024 12:40 pm 0 comment

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக அநுராதபுரம் மாவட்டத்தின் கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 205 ம் இலக்க கிராம உத்தியோகத்தர் பிரிவின் சம்பத்கம கிராமத்தில் நேற்று முன்தினம் (20) மின்னல் தாக்கத்தினால் வீடு உட்பட வீட்டின் மின் உபகரணங்களும் முற்றாக சேதமடைந்துள்ளன. இதனால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.மழை மற்றும் மின்னல் காலங்களில் மின் உபகரணங்களை பாவனையிலிருந்து துண்டித்து வைக்குமாறு கேட்டுக் கொள்வதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களான கங்கா ஹேமமாலி மற்றும் திலினி தில்ஹாரா ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.இங்கு மின்னல் தாக்கத்தின் காரணமாக சேதமடைந்த வீட்டையும் வீட்டின் மின் உபகரணங்களையும் படங்களில் காணலாம்.

திறப்பனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT