Sunday, June 16, 2024
Home » வெள்ள நிவாரணப் பணிகளை அலி சப்ரி ரஹீம் எம்.பி. பார்வையிட்டார்
புத்தளத்தில் முன்னெடுக்கப்படும்

வெள்ள நிவாரணப் பணிகளை அலி சப்ரி ரஹீம் எம்.பி. பார்வையிட்டார்

by mahesh
May 22, 2024 2:41 pm 0 comment

புத்தளம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கி காணப்படுகின்றதோடு மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானவர்களுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக புத்தளம் பெரிய பள்ளிவாசலின் தலைமையில், புத்தளம் நகர மற்றும் புத்தளம் மாவட்ட உலமா சபையின் முன்னெடுப்பில் ஐக்கிய வர்த்தக சங்கம், வரையறுக்கப்பட்ட உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கம், பொது நிறுவனங்கள் மற்றும் தனவந்தர்களின் உதவியால் உடனடி நிவாரணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தனது பங்களிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஒரு தொகை அரிசியினை வழங்கி வைத்ததோடு இந்த முன்னெடுப்புகள் தொடர்பாக புத்தளம் ஐ.பீ.எம். மண்டபத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டார்.

தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தினால் இரவு வேளையிலும் சமைத்த உணவுகளை நிவாரணமாக வழங்குவதற்காக புத்தளத்தைச் சேர்ந்த தனவந்தர்கள், பொது அமைப்புகள், நிறுவனங்கள் தங்களது உதவிகளை புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிவாரண குழுவுக்கு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புத்தளம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT